சொல்லிட்டாங்க...

இப்போது நான் செல்லக்கூடிய நாடாளுமன்றம் எனக்கு புதிது. அங்குள்ள உறுப்பினர்கள் எனக்கு பழக்கம் இல்லாதவர்கள். ஆனாலும் தமிழகத்துக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

ஆர்டிஐயில்  திருத்தம் கொண்டுவருவது மிக மோசமான நடவடிக்கை. இது மத்திய மற்றும் மாநில  தகவல் ஆணையங்களின் சுதந்திரத்தை பறிக்கும். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

8 வழிச்சாலை எனப்படும் அதிவிரைவு சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம். - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்பாவி மக்களையும் ராணுவ வீரர்களையும் பயங்கரவாதிகள் ஏன் கொல்ல வேண்டும். அதற்கு பதில் காஷ்மீர் வளங்களை கொள்ளை அடித்த லஞ்ச பேர்வழிகளை சுட்டுக் கொல்லலாமே. - காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்.


Tags : Vaiko, General Secretary.
× RELATED சொல்லிட்டாங்க...