மூன்று நாளில் 4 லட்சம் கோடி போச்சு

மும்பை: பங்குச்சந்தையில் தொடர்ந்து 3 நாட்களில் பங்குகளின் மதிப்பு 4 லட்சம் கோடிக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பங்குச்சந்தையில் 3வது நாளாக நேற்றும் சரிவு ஏற்பட்டது. நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 305.88 புள்ளிகள் சரிந்து 38,031.13 ஆக இருந்தது. பங்குகளின் மதிப்பு 4,37,602.4 கோடி சரிந்து 1,44,76,204.02 கோடியானது.   மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்கள் பங்கு மதிப்புகள் சரிவை சந்தித்தன. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,346 ஆக இருந்தது.

Advertising
Advertising

Related Stories: