தமிழகத்திற்கு எதிரான திட்டத்தை கொண்டு வந்தால் மத்திய அரசை எதிர்ப்போம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடி

சிவகாசி: தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால், மத்திய அரசை தொடர்ந்து எதிர்ப்போம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலாவை சிறையிலிருந்து சட்டரீதியாக டிடிவி.தினகரன் வெளியில் கொண்டு வந்தால் மகிழ்ச்சிதான். அவர் சிறையில் இருந்து வெளிவந்தாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்காது. தேசிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா மட்டுமல்ல. யார் சொன்னாலும், அதை முதல்வர் ஏற்றுக்கொள்வார்.

நீட் தேர்வு விலக்கிற்கு, தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தால், தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். நாட்டின் பிரதமரை முன்மொழியும் அளவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர்ந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.× RELATED பால் விலை உயர்வால் மக்களிடம் எந்த...