அண்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மரக்கன்று நடும் பணி தீவிரம்

செம்பட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அண்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பூங்காக்கள், சாலையோரம் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் மரக்கன்றுகளை நட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் ரெட்டியார்சத்திரம்  ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயசந்திரிகா முகமது மாலிக் ஆகியோர் தலைமையில் பூங்காக்கள், குளக்கரைகள் மற்றும் சாலையோரம் பகுதிகளில் மரக்கன்றுகள்  நடப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக ரெட்டியார்சத்திரத்தில் உள்ள அண்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சுதா தலைமை வகித்தார். விழாவில் கல்லூரி  மாணவிகளுடன் இணைந்து மாணவிகள் விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா நட்டார். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். சில்வார்பட்டி ஊராட்சி செயலாளர்  ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: