கழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா?: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு

போபால்: ‘கழிவறையோ, கழிவுநீர் கால்வாய்களையோ சுத்தம் செய்வதற்காக நான் எம்பி ஆகவில்லை’ என்று பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்வச் பாரத்’ என்ற பெயரில் நாடு  முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். அதன்படி, பாஜ கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர், தூய்மைப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்தியப்  பிரதேச மாநிலம் சாகோர் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர்,  ‘‘நான் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக எம்பி ஆகவில்லை. நாடாளுமன்றத்தில் நேர்மையான எம்பியாக செயல்படவே  விரும்புகிறேன்’’ என்று கூறினார்.

பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து மேடைக்கு மேடை பேசும் நிலையில், மோடியின் கொள்கை, திட்டத்துக்கு எதிராக பிரக்யாக கருத்து தெரிவித்து இருப்பது மத்திய பிரதேச பாஜவில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து அம்மாநில பாஜ தலைவர்களிடம் கேட்டபோது, ‘பிரக்யா தாக்கூர் கூறியிருப்பது எங்களுக்கு தெரியாது’ என்றனர். காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘மகாத்மா காந்தி பற்றி அவதூறு பரப்பிவிட்டு, கோட்சேவை  புகழ்பவர்களுக்கு நாடாளுமன்றத்தில் என்ன வேலை?’ என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: