சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் அனுப்ப திட்டம்: சிவன் பேட்டி

சென்னை: அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யாவை விண்ணில் செலுத்த உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தெற்கு பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது. வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 நிலைநிறுத்தப்பட்டது என்று சிவன் தெரிவித்துள்ளார். சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தில் ரோவர் வாகனம் இறங்கினால் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: