மார்த்தாண்டத்தில் இன்று காலை பரபரப்பு: நடுரோட்டில் அரசு பஸ் டயர் வெடித்தது...பயணிகள் அலறல்

மார்த்தாண்டம்: படந்தாலுமூடு பணிமனையில் உள்ள அரசு பஸ் இன்று காலை களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. சிஎஸ்ஐ மருத்துவமனையை தாண்டி பஸ் வந்தபோது திடீரென முன்பக்க டயர்களில்  ஒன்று நடுரோட்டில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.  டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திவிட்டார். பின்னர் பயணிகள் இறங்கி நடந்து சென்றனர். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலைகள் மிகவும் அகலம் குறைவாக உள்ளன. இதனால் கனரக வாகனங்கள்  தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன.

இந்த நிலையில் பஸ் சாலையில் படுத்து கொண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னால் வந்த வாகனங்கள் வலதுபக்க சாலையில் ராங்க் சைடில் வந்து, பின்னர் இடதுபுற சாலையில் திரும்பி சென்றன.  இதனால் காலை வேளையில் மேலும் நெருக்கடி அதிகரித்தது. பள்ளி, கல்லூரி, நிறுவனங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டியவர்கள் விழிபிதுங்கினர். தொடர்ந்து மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து ெதாழிலாளர்கள் வந்து டயரை மாற்றி  பஸ்சை எடுத்து சென்றனர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.

Related Stories: