விருத்தாச்சலம் அருகே மின்கம்பத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்குதல்: ஒருவர் கைது

கடலூர்: விருத்தாச்சலம் அருகே விளாங்காட்டூர் பகுதியில் மின்கம்பத்தில் பெண்ணை கட்டிவைத்து தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியசாமி என்பவரின் மகளை செல்வி என்பவரின் மகன் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தாக்குதல் நடந்தது. செல்வியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விவகாரத்தில் கொளஞ்சியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான கொளஞ்சியம் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மகள் எங்கே எனக் கேட்டு பெரியசாமியின் தயார் செல்வியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: