தேங்கிய மழைநீர் வடிந்து விட்டதை ஆய்வு செய்ய அதிகாரிகள் என்னுடன் வருவார்களா? நீதிபதிகள் கேள்வி

சென்னை: மழைநீர் சேகரிப்பு குறித்து தமிழக அரசிடம் திட்டம் ஏதுவும் இல்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தேங்கிய மழைநீர் வடிந்து விட்டதை ஆய்வு செய்ய என்னுடன் அதிகாரிகள் வருவார்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை ஏன் நியமிக்க கூடாது? என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Rainwater harvesting, judges, question
× RELATED தூர்வாரப்படாத நீர் வரத்து கால்வாய்...