வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான்-2: விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பாராட்டு

புதுடெல்லி: நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் பூமியின் வட்டப் பாதைக்கு சென்றடைந்தது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம், 20 மணி நேர கவுன்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, இன்று மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியின் வட்டப் பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர். சந்திராயன் -2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் வாழ்த்து:

alignment=

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்- 2 விண்கலம் ஏவப்பட்டது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை மிக்கத் தருணம் என தெரிவித்தார். இந்தியாவின் சுதேச விண்வெளி திட்டத்தை மேலும் மேம்படுத்திய நமது விஞ்ஞானிகளுக்கும் பொறியியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார். இப்போதிலிருந்து சுமார் 50 நாட்களில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் இறங்கிய முதல் விண்கலம் சந்திரயான் 2 ஆகும் என்றும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த விண்கலம் வழிவகுக்கும், எங்கள் அறிவு அமைப்புகளை வளமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறினார். மேலும், சந்திரயான் -2 குழுவில் உள்ள அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். சந்திரயான்-2 வெற்றியின் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

alignment=

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது பிரதமர் மோடி கைதட்டி மகிழ்ந்தார். அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவு குறித்த இன்னும் பல அறிய தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் என்று மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாராட்டு:

சந்திரயான்-2 வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மக்களவை, மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, மாநிலங்களவை தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், இந்த முக்கிய சாதனைக்காக தங்கள் நாட்டு விஞ்ஞானிகளுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தார். இந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் காரணமாக நாடு பெருமிதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் வாழ்த்து:

சந்திரயான்-2 விண்கலத்தை குறைபாடற்ற முறையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தந்து வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை இஸ்ரோ குழு நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் குழுவினரை நினைத்து இந்த நாடு பெருமிதம் அடைந்துள்ளது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதே போன்று, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கவிஞர் வைரமுத்து வாழ்த்து:

“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை” என்று 130 கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: