சந்திரயான் 2 திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் : இஸ்ரோ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டா : ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2, புவி வட்டப்பாதையை சென்றடைந்தது. இதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்ப்போது அவர் கூறியதாவது; சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் பாய்ந்தது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியின் வட்டப் பாதையை 16 நிமிஷங்களில் சென்றடைந்தது. இதன் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த பணியால் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். மேலும் சந்திரயான் 2 திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் தெரிவித்தார். இதுவரை நிலவு குறித்து தெரியாத விவரங்கள் அனைத்தும் இனிமேல் சந்திராயன் மூலம் தெரியவரும் என்றார்.

கடந்த 15-ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை வெற்றிகரமாக சீராக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. மேலும் சந்திரயான்-2ல் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு 24 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது என்று சிவன் பெருமையுடன் கூறினார். இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களின் கடின உழைப்பால்தான் சந்திரயான் -2 சாதனை சாத்தியமாகி உள்ளது. மேலும் சந்திரயான் -2  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட காரணமாக உள்ள அனைவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தெரிவித்தார்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க் - 3 ராக்கெட்டின் செலுத்து திறன் 15% அதிகரிக்கப்பட்டு உள்ளது. 4 டன் எடையை விண்ணில் செலுத்தும் அளவுக்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திறன் நெருங்கி விட்டது. சந்திரயான்-2 விண்கலத்தை இயக்கம் குழு இனி தந்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் என்று கூறினார். மேலும் அடுத்த சில நாட்களில் 15 வகையான உத்தரவுகளை பிறப்பித்து சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: