தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்துவது என்ற பெயரில் அச்சட்டத்தை பா.ஜ.க. அரசு ஒழிப்பதாக சசிதரூர் எம்.பி. பேசியுள்ளார். பொதுமக்களின் கருத்தை அறியாமல் அவசர அவசரமாக மசோதாவை தாக்கல் செய்தது ஏன் என்று மக்களவையில் சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். தகவல் ஆணையர்களின் சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் சட்டத்திருத்தம் செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றசாட்டியுள்ளார்.

Related Stories: