தமிழகத்துக்கான உள்ளாட்சி நிதி 2017-18-ம் ஆண்டில் ரூ.1573 கோடி குறைந்துள்ளது : சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்

டெல்லி: தமிழகத்துக்கான உள்ளாட்சி நிதி 2017-18-ம் ஆண்டில் ரூ.1573 கோடி குறைந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CAG என்பது இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரசு செலவு கணக்கை சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதை நிர்வகிப்பவர் குடியரசுத் தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். ஆனால், அரசுக்கு எந்த விதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.

நிதிக்குழு பரிந்துரைக்கு மாறாக தமிழக அரசுக்கு மத்திய அரசு குறைவாக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கிராம ஊராட்சி அமைப்புகளுக்கான நிதி ரூ.1516 கோடிக்கு பதில் ரூ.758 கோடியே தமிழகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற ஊராட்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட ரூ.1264 கோடியில் ரூ.815 கோடியே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கான உள்ளாட்சி நிதி 2017-18-ம் ஆண்டில் ரூ.1573 கோடி குறைந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்தாததே மத்திய அரசின் நிதி குறைவதற்கு காரணம் என சி.ஏ.ஜி. தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: