வேலூரில் வெற்றிக்கனியை பறித்திடுவோம் ; கலைஞரின் தங்கத் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை : வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திட வேண்டும் என்றும் ஆக. 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, கருணாநிதியின் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் என்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுவோர் செய்த சதியால் ஏற்கனவே வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது என்றும் ஸ்டாலின் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களை கடந்து தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. போய்ப்புகாரால் வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்ட போதிலும் தேனி தொகுதியில் தேர்தலை ஆணையம் நிறுத்தவில்லை. என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படுகின்றனர் என்று ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்தும் மும்மொழி திட்டத்தை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பிக்கள் முழங்கியதாக அறிக்கையில் குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழை புறக்கணித்த அஞ்சல்துறை தேர்வு திமுக கூட்டணி எம்பிக்களின் உரிமை முழக்கத்தால் ரத்து ஆனது என்றும் என்ஐஏ சட்டத் திருத்தத்தில் சிறுபான்மை மக்கள் நலன் பாதிக்கப்படக்கூடாது என திமுக கூட்டணி எம்பிக்கள் குரல் கொடுத்ததாகவும் கூறினார். மேலும்  7 தமிழர் விடுதலை, நீட் தேர்வு ரத்து, ரயில்வே துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு என்று தொடர்ந்து திமுக கூட்டணி எம்பிக்கள் குரல் கொடுத்து வருவதாகவும் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.


Tags : Karunanidhi, tribute, Vellore, Vijaykani, Stalin
× RELATED ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்...