ஈரான் சிறைபிடித்த பிரிட்டிஷ் கப்பலில் 18 இந்திய மாலுமிகளை தவிப்பு : ஈரானுடன் தொடர்ந்து பேசி வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி : ஈரான் சிறைபிடித்துள்ள பிரிட்டிஷ் கப்பலில் உள்ள 18 இந்திய மாலுமிகளை மீட்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து பேசி வருவதாக வெளியுறவுத் துறை Gibraltar கூறியுள்ளார். சிறைபிடிக்கப்பட்ட Stena Impero கப்பலில் இருந்த 18 இந்தியரை விடுவித்து தாயகம்  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதே போல் கப்பலையும் 23 மாலுமிகளையும் மீட்பது குறித்து ஈரானுடன் பிரிட்டனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் ஜிப்ரால்டரில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பிரிட்டிஷ் கப்பலை விடுவிக்க முடியும் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சிறைபிடிக்கப்பட்டுள்ள பிரிட்டன் கப்பலில் உள்ள 18 இந்தியர்களில் 4 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. இதையடுத்து கப்பலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.

Related Stories: