கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 30 கோடி தருவதாக பேரம்? : காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூரு : கர்நாடகாவில் எடியூரப்பா குதிரை பேரத்தில் ஈடுபடும் ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் பிரச்சனை எழுப்பி இருப்பதால் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகல் முடிவால் எழுந்துள்ள சிக்கலை களைந்து ஆட்சியை தக்கவைக்க ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியும் ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜக-வும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஒரு பகுதியாக பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

Advertising
Advertising

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை விலைபேசுவது குறித்த எடியூரப்பா, முரளிதரராவு உரையாடல் ஆதாரம் இருப்பதாக கூறினார். சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளம் விட்டுத்தர முன்வந்ததாக வெளியான செய்தி வெறும் வதந்தி தான் என்றும் இவர் விளக்கமளித்தார். எடியூரப்பா குதிரை பேரம் பேசும் ஆடியோ குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் பிரச்சனை எழுப்பப்போவதாக அறிவித்துள்ளதால் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Related Stories: