இளம்பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி: அத்திவரதரை தரிசிக்க காலையிலேயே அலைமோதிய கூட்டம்

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று இளம்பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நகரேஷூ காஞ்சி என்று சிறப்புடன் வரலாற்றில் காஞ்சிபுரத்தை குறிப்பிடுகின்றனர். இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில் உலகப்புகழ் பெற்றது வரதராஜப் பெருமாள் கோயில். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் விசேஷம் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளது.  ஜூலை 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், ஜூலை 25ம் தேதிமுதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நின்ற கோலத்திலும் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 22 ஆம் நாளான இன்று அத்திவரதர் இளம்பச்சை நிற பட்டாடையிலும், கராம்பு பூ அலங்காரத்திலும்  பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நேற்று சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருந்த போதிலும் இந்த கூட்டத்தில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை குறைந்தது. அதாவது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அப்பகுதியில் ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 1000 போலீசார் வரவழைக்கப்பட்டனர். இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. இருந்த போதிலும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களை விட அத்திவரதரை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.


Tags : Teal, attivaratar
× RELATED டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 208...