கடந்த ஜனவரி - ஜூன் மாதத்தில் மொத்த கட்டுமானத்தில் மலிவு விலை வீடு 29%தான்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் கட்டப்பட்ட மொத்த வீடுகளில் மலிவு விலை வீடுகள் 29 சதவீதம்தான் என தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் முதல் முறை வீடு வாங்குவோருக்கு வட்டி மானியம் வழங்குகிறது. மலிவு விலை வீடுகளின் தேவை அதிகம் உள்ளதால், இந்த பிரிவுக்கான வீடுகளின் விலை உச்சவரம்பு ₹45 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகம் பேர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியும்.  

Advertising
Advertising

 இருப்பினும், மலிவு விலை வீடுகள் கட்டுமானம் குறைவுதான் என தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள முக்கியமான 7 நகரங்களில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் 1,39,490 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 39,840 வீடுகள் மட்டுமே மலிவு விலை பிரிவில் கட்டப்பட்டவை. மொத்த கட்டுமானத்தில் இது சுமார் 29 சதவீதம்தான் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: