ஏர் இந்தியாவில் புதிய பணி நியமனங்கள் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பவர்களை கண்டறிந்து ஆலோசனை நடத்தும் முடிவில் அரசு இருக்கிறது. இந்த வர்த்தக நடவடிக்கைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிடவும் திட்டமிட்டுள்ளது.  கடந்த ஆண்டு மேற்கொண்ட முயற்சியில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால், நஷ்டத்திலேயே இயக்கப்படுகிறது. சுமார் 57,742 கோடி கடனில் மூழ்கியுள்ள இந்நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் ₹7,600 கோடி நஷ்டம் அடைந்தது. இவ்வாறு பங்குகளை விற்பனை செய்யும் முடிவு காரணமாக, ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் புதிய பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: