ஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்

புவனேஸ்வர்: ஒடிசாவின் மன்சேஸ்வரில் தபால் துறை அச்சகம் அமைந்துள்ள பகுதியில் மாநிலத்தின் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டிற்கு கடிதங்கள், சரக்குகள் அனுப்புவதில் ஏற்படும் கால தாமதத்தை கருத்தில் கொண்டு தபால் மற்றும் சுங்க துறையின் கூட்டு ஒத்துழைப்புடன் தபால் துறை இதனை நிறுவி உள்ளது.  இது தொடர்பாக தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்பு ஒடிசாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப பதிவு செய்யப்படும் சரக்குகள், பொருட்கள் கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதனால், சுங்க அனுமதி பெறுவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த தாமதம் தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : First,Foreign, Post Office, Odisha
× RELATED இரணியல் புதிய தபால் நிலையம் திறப்பது எப்போது?: திமுக மறியல் அறிவிப்பு