அனைத்து கருத்துகளையும் பேச அதிமுக ஆட்சியில்தான் முழு சுதந்திரம் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சென்னை ராயபுரம் பகுதி ஏ.ஜெ. காலனியில் புதிதாக அமைக்கப்பட்ட  சேனியம்மன்  மீனவர் கூட்டுறவு சங்கத்தை  மின்வள துறை அமைச்சர் ஜெயகுமார்  நேற்று திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வேலூர் தொகுதி தேர்தலில் பாஜவுடன் கூட்டணி தொடரும். எட்டு வழி சாலை குறித்து முதல்வர் தெளிவாகவே பதில் அளித்துள்ளார். அது மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும்.  காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.

Advertising
Advertising

தமிழக அமைச்சர்கள் இதுவரை தரிசனம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல, 48 நாட்கள் இருப்பதால் தரிசனத்திற்கு செல்ல நாட்கள் இருக்கிறது.மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இருக்கும் சங்கங்கள் பிரிக்கப்படும்.  நீட் தேர்வு குறித்து சட்டசபையில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கருத்துகளையும் பேச அதிமுக ஆட்சியில் தான் முழு சுதந்திரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: