நிர்மலா சீதாராமனுடன் பாஜ மீனவர் அணி சந்திப்பு

சென்னை: தமிழக பாஜக மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் மீனவர் அணி நிர்வாகிகள் கொட்டிவாக்கம் முருகன், கோவிலம்பாக்கம் சீனிவாசன், உமாபதி, வினோத் உள்ளிட்ட மீனவர் அணியை சார்ந்தவர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மீன்வளத்துறைக்கு அமைச்சகம் அமைத்ததற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் மீனவர்கள் நலன் சார்ந்த, தொழிற்சார்ந்த விஷயங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். படகுக்கு முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் லோன் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்குவதை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். மீனவர்களுக்கான கோரிக்கையை கேட்டு கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவன செய்வதாக உறுதி அளித்ததாக மீனவர் அணியினர் தெரிவித்தனர்.


× RELATED நேரடி வரிவிதிப்பு வரைவுச் சட்ட...