திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி வெற்றி

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக  இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததையடுத்து புதிய நிர்வாகிகளுக்கான  தேர்தல் நடக்க இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க  பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி  தேர்வு செய்தனர். பாரதிராஜா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து, திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் போட்டியிட்டனர். இதில் 1,386 வாக்குகள் பெற்று செல்வமணி வெற்றி பெற்றார். வித்யாசாகருக்கு 100 வாக்குகள் கிடைத்தன. பொருளாளர், செயலாளர் பதவிக்கு 2 இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வானார்கள்.


Tags : RK Selvamani ,wins ,film directors,election
× RELATED செய்தித்துறையில் இணை இயக்குநர்கள் 3 பேருக்கு பதவி உயர்வு