×

பூந்தமல்லி அருகே தண்ணீர் திருடிய 20 லாரிகள் பறிமுதல்: ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள் மீது வழக்கு

சென்னை : தண்ணீர் திருடி விற்க முயன்ற லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னை பூந்தமல்லியை அடுத்த பிடாரிதாங்கல் பகுதியில் உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் மூலம் லாரிகளில் தண்ணீர் திருடப்படுவதாக தொடர்ந்த வழக்கில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, பூந்தமல்லி தாசில்தார் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று பூந்தமல்லி தாசில்தார் தலைமையில் பிடாரிதாங்கல் பகுதியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றினார்கள்.

மேலும் அங்கிருந்து மின் மோட்டார்கள், பைப்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதியின்றி தண்ணீர் எடுத்து சென்ற 20 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஆழ்துளைகிணறு அமைத்த உரிமையாளர்களின் மீது வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : 20 trucks,stolen,Poonthamalli seized
× RELATED பொது விடுமுறை நாட்களில்...