இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளராக தேர்வு டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மாநிலங்களவை உறுப்பினரும், பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் செறிவான கருவூலமாகவும் விளங்கும் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்றமைக்கு, திமுக  சார்பில் இதய பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள முக்கியமான காலகட்டத்தில் ராஜா பொதுச்செயலாளராகியிருப்பது வரவேற்கத்தக்கது. மதசார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றின் பாதுகாவலராக, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் உரிமைக்குரலாக-துணிச்சலான போராட்ட குணத்திற்குச் சொந்தமான ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை யாரும் அசைத்திட முடியாதவாறு பாதுகாக்கும் பெரும் பணியில் அவர் மென்மேலும் பல வெற்றிகளை பெற்றிட வேண்டும் என்று  மனதார வாழ்த்துகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin,congratulates, D Raja,election,Communist General Secretary ,India
× RELATED பிறந்த நாள் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து