2018-19ல் மின்சாரம் திருடியவர்களிடம் இருந்து ரூ.69 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: மின்வாரியம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் மின்சாரம் திருடியவர்களிடம் இருந்து சுமார் ₹69 கோடிக்கு மேல் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏராளமான வீடு, தொழிற்சாலைகள், கடைகள் உள்ளன. இவர்களில் சிலர் சட்டத்துக்கு புறம்பாக மின்திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின்திருட்டை தடுக்க முன்னாள் ராணுவ வீரர்கள் கொண்ட குழு, அமலாக்க குழு, புலனாய்வு குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இக்குழுக்கள் அவ்வப்போது ஆய்வு நடத்தி விதிகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்தவகையில் நடப்பு 2018-19ம் ஆண்டில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் ₹69 கோடிக்கு மேல் அபராதத்ெதாகை வசூல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2017-18ம் ஆண்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்திருட்டுக்கள் கண்டறியப்பட்டு, 55 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் மின்திருட்டு அதிகரித்துள்ளது.

Related Stories: