ஆன்லைனில் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஏராளமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை தமிழக மின்சார வாரியம் விநியோகித்து வருகிறது. மற்றொருபுறம் தினந்தோறும் புதிய மின்இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கு மின்இணைப்பு பெறுவோரும் இணையத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி கடந்த 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஆங்காங்குள்ள அலுவலகங்களில் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது.அந்த போஸ்டர்களில், ‘ழிற்சாலைகளுக்கு தாழ்வழுத்த மின் இணைப்பு பெறுவதற்கு 1.7.2019முதல் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertising
Advertising

இதன்படி www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் மற்றும் சான்றொப்பமிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். எனவே, இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி மின் இணைப்பு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் தங்கள் பகுதிக்குட்பட்ட அலுவலரை அணுகுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: