பத்திரப்பதிவு துறையில் பரவியுள்ள குளறுபடிகளுக்கு தீர்வு தான் என்ன?

* சைதாப்பேட்டை -  ஒரு கோடி, தி நகர் 80 லட்சம், பாரிமுனை 2 கோடி... இதெல்லாம்  என்ன. கடைகள் ஏலத்தொகை என்று  நினைக்க வேண்டாம். பத்திரப்பதிவு பதவிக்கு இவ்வளவு ‘வைத்தால்’ தான் கிடைக்குமாம்; ‘வாங்கி விட்டால்’ கண்டிப்பாக பதவி மாற்றம் கிடைத்தே தீரும்.
* நம்ப முடியவில்லையா? லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை திருப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல மணி நேரம் ரெய்டு நடத்தினர். லஞ்சப்பணத்தை கைமாற்றி விட்ட விவகாரம் எல்லாம் அம்பலமானது. ஆனால், சிக்கிய முக்கிய பதிவாளருக்கு தண்டனை கிடைத்ததா என்றால் அது தான் இல்லை. அவருக்கு சூப்பர் இடத்தில் ‘கைநிறைய’ அள்ள ‘பரிசு’ கிடைத்தது என்றால் நம்புவீர்களா?
* உண்மை  தான். லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கினால் என்ன? கை நீட்டி வாங்கிவிட்டதால் ஒரு நியாயம் வேண்டாமா? இடமாற்ற பட்டியலில் அவர் பெயர் இருக்கட்டும் என்று விடப்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் வளம் கொழிக்கப்போகிறார்; லஞ்ச ஒழிப்பு துறை எப்போது பிடிக்குமோ என்று பேசிக்கொள்கிறார்கள்.  
* எல்லாவற்றிலும் வந்தது போல பதிவுத்துறையிலும் பொதுமக்களுக்கு வசதியாக ஆன்லைன் வசதி வந்து விட்டது. ஆனால், ஒரு பெருங்கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது. பல இடங்களில் பதிவாளர்கள் இல்லை; இன்சார்ஜ் என்று கீழ் உள்ள மூத்த ஊழியர்  தான் பதிவாளர் பணியை செய்கிறார். சூப்பர் சுருட்டலுக்கு இந்த வழி கைகொடுப்பதால் மேல்மட்டத்தில் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் ஊழியர்கள். பத்திரப்பதிவு துறையை பொறுத்தவரை தவறு செய்ய தயங்குவதே இல்லை. கோர்ட்டே சொன்னாலும் சட்டத்தின் ஓட்டையில் ஒளித்து கொள்ளும் தகிடுதத்தம் இவர்களுக்கு உண்டு. பாதிக்கப்படுவது பொதுமக்கள்  தான். தீர்வு தான் என்ன? இதோ நான்கு திசை அலசல்.

Tags : What , solution, dilemmas , record industry
× RELATED பொருளாதார மந்தநிலை பற்றி பிரதமர் வாய்...