ஆன்லைன் பதிவால் லஞ்சத்துக்கு வழியில்லை: வைகை செல்வன், முன்னாள் அதிமுக அமைச்சர்

பத்திரப்பதிவு துறையில் பல முன்னேற்றங்களை செய்து வருகிறது அரசு. எல்லாம் ஆன்லைன் மூலம் நிறைவேற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  எந்த காரணத்தை கொண்டும் பொதுமக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதில் அரசு முழு அக்கறையுடன் உள்ளது. இதற்காக பல மாற்றங்களை எளிது படுத்தியுள்ளது.  எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு புதிய மாற்றத்தை, புதிய வளர்ச்சியை நோக்கி அதிமுக அரசு கொண்டு சென்று இருக்கிறது. அந்த புரட்சியின் வடிவம் தான் ஆன்லைன் பத்திரபதிவு திட்டம். எந்த ஒரு பதிவுக்குமே நேரில் செல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ஆன்லைன் மூலம் நாம் நிறைவேற்றிக்கொள்ளலாம். பொதுமக்களுக்கு இந்த டிஜிட்டல் வசதி பெரும் பலன்களை தருகிறது.
பத்திரப்பதிவுக்காக முன்பெல்லாம் பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள் இப்போது இல்லை. கடந்த காலங்களில் பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் கால்கடுக்க நின்று, டோக்கன் வாங்கி பத்திரம் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும்; இப்போது அந்த சிரமங்கள் இல்லை.  இப்போது வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் முன்பதிவு செய்து பத்திரம் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வசதியால் பொதுமக்களுக்கு எந்த குறையும் இல்லை. ஆன்லைன் மூலம் லஞ்ச ஊழலை தடுப்பதற்கு மக்களுக்கு எளிதான முறையில் பத்திர பதிவு நடைபெறுவதற்கும் இது வழிவகுக்கும்.
 
 நேரில் சென்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும் போது கூட ஏதாவது தவறுகள் நடக்கலாம். ஆனால், ஆன்லைன் பத்திரபதிவின் போது இப்படி நேராது; டிஜிட்டலில் தவறான முறையில் பத்திர பதிவு செய்யப்படும் நிலை ஏற்படாது. ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் போது மீண்டும் அந்த சொத்துக்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாடிட முடியாது. மூல பத்திரம், அவர்களது ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுவதால் தவறாக பதிவு செய்து விட முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும், எந்த பத்திரத்தை வேண்டுமானாலும் ஒருவர் எடுத்து கொள்ளலாம். புதிதாக ஒரு திட்டம் தொடங்கும் போது சிறு,சிறு பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அதுபோல டிஜிட்டலில் சில தவறுகள் நேரலாம். இப்போது எல்லாம் தீர்க்கப்பட்டு விட்டது. உதாரணமாக, ஆரம்பத்தில் நாம், அடுத்தவருக்கு தகவல் தெரிவிக்க, தொடர்பு கொள்ள கடிதம் எழுதினோம். காலப்போக்கில் அது மறைந்து இப்போது இமெயிலில் எழுதி அனுப்புகிறோம். விஞ்ஞானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி தொழில்நுட்ப புரட்சி. இந்த தொழில்நுட்பத்திற்கு கையாளுகிற திறனை வளர்க்கும் போது தமிழர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அந்த ஆற்றலையும் திறனையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழில்நுட்ப கற்றுத்தருகிற பாடம். இந்த வளர்ச்சியில் தான் ஆன்லைன் டெண்டர், ஆன்லைன் டிக்கெட் பெறுவது போன்றது தான். இது போன்று ஆன்லைனில் அனைத்து சேவைகளும் கொண்டு வரும் போது ஏற்படுகிற பிரச்னை காலப்போக்கில் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து விடும். பெரும்பாலும் பதிவு செய்ய பத்திரங்களை சார்பதிவாளர்கள் திருப்பி தந்து விடுவார்கள். அப்படி சார்பதிவாளர்கள் யார் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தராமல் இருந்தால் அவர்களுடைய மேலதிகாரிக்கு புகாரை கொண்டு சென்றால் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும். பொதுமக்களுக்கு பத்திரம் கிடைக்க உயர் அதிகாரிகளும் வழிவகை செய்வார்கள்.
ஆன்லைன் மூலம் லஞ்ச ஊழலை தடுப்பதற்கு மக்களுக்கு எளிதான முறையில் பத்திர பதிவு நடைபெறுவதற்கும் இது வழிவகுக்கும்.

Tags : Vigi Selvan, Former ,Prime Minister of India
× RELATED முன்னாள் பிரதமர் குஜ்ராலின் பேச்சை...