பத்திரப்பதிவு தாமதம் கண்காணிக்க வேண்டும்: ராம் பிரபு, அகில இந்திய கட்டுனர் சங்க தென்னக மையம் தலைவர்

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்ய முன்பதிவு மட்டும் தான் ஆன்லைனில் நடைபெறுகிறது. மற்றபடி அனைத்தும் நேரடியாக சென்று அலுவலகத்தில் தான் செய்ய வேண்டியதாக உள்ளது. பத்திரப்பதிவு தொடர்பாக அரசு பொதுவான வரையறை கொடுத்து இருக்கிறார்கள்;  அதாவது அடகுபத்திரம், செட்டில்மெண்ட் என்றால் இப்படிப்பட்ட விதிகள் படி செய்ய வேண்டும்;  என்ன தான் ஆன்லைனில் பதிவு செய்தாலும், டாக்குமெண்ட், பட்டாவை சரிபார்ப்பு என்பது வரவேற்கத்தக்கது. ஆன்லைனில் பதிவு செய்து விட்டு டாக்குமெண்ட்டில் ஏதாவது பிரச்னை இருந்தால் தான் உரியவரிடம் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், அதற்கு முன்பே, அதிகாரிகள் இது சரியில்லை, அது சரியில்லை என்று கூறுவது வழக்கமாக உள்ளது. இப்படி கூறாமல் ஏதாவது தவறுகள் இருக்கும் பட்சத்தில் வெளிப்படையாக கூறிவிடலாம். அதையும் அவர்கள் சரிவர சொல்ல மாட்டார்கள்.  அவர்களுக்கு மட்டுமே தெரிந்தது போல குழப்புவார்கள்.  என்ன தேவையோ, அதை சொல்லி விட்டால் கொடுத்தால் போதும்; குழப்ப கூடாது என்று அதிகாரிகளுக்கு தெளிவான வழிமுறைகளை விதிக்க வேண்டும்.  எளிமையாக விதிகளை போட்டு, முழுக்க முழுக்க ஆன்லைனில் வைத்து விட்டால் போதும்;  சாதாரண மக்கள் கூட விரைவில் பதிவு பண்ணலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இடைத்தரகர் இல்லாமல் விரைவாக பண்ணி முடிக்கலாம். செயல் வடிவ அறிக்கையின் தான் குறை கண்டுபிடிக்கிறார்கள். இந்த போக்கை கைவிட வேண்டும்; பொதுமக்களுக்கு தெளிவான வழிமுறைகளை சொல்ல வேண்டும்.  ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது பல வகையில் லஞ்ச ஊழல் தவிர்க்கலாம்.

 சில பதிவாளர் அலுவலகங்களில் பணம் கேட்கின்றனர். அப்படி கேட்கக்கூடிய அதிகாரிகள் மீது கடும்  நடவடிக்கை வேண்டும். திட்டமிட்டு அவர்கள் லஞ்சத்துக்காக மக்களை வதைப்பதை தவிர்க்க தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். பத்திரப்பதிவு தொடர்பான விஷயங்களுக்கு  அரசே சில செயல்வடிவ அறிக்கை கொடுக்கிறது. அதன்படி, பொதுமக்கள் கொண்டுவரும் டாக்குமெண்டுகளை இழுத்தடிக்காமல் உடனே பதிவு பண்ண வேண்டும். அப்படியில்லாமல் அதிகாரிகள் சிலர், அதை இழுத்து அடிப்பது சரியல்ல; அவர்களாகவே பத்திரத்தை தயார் செய்தால் தவறு இருக்கிறது என்று சொல்லலாம். அரசு விதிகளின் படி தயார் செய்த பத்திரத்தை இழுத்தடிக்க கூடாது.  அதாவது ஒருவாரத்தில் 100 பத்திரப்பதிவு  நடக்கிறது என்றால் இந்த வாரத்தில் எந்தெந்த பத்திரப்பதிவுகள் முடிக்கப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்க ஆய்வு கமிட்டி போட வேண்டும். மேலும் ஒருவாரத்தில் 500 டாக்குமெண்ட் பதிவு பண்ணுகிறோம் என்றால் வார முடிவு நாட்களில் எத்தனை டாக்குமெண்ட் முடிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது என்பதை தலைமை அலுவகத்தில் இருந்து மானிட்டர் செய்ய வேண்டும். அப்படி மானிட்டர் பண்ணும் போது இவ்வளவு டாக்குமெண்ட் பண்ணியிருக்கிறீர்கள் ஏன் இவ்வளவு நிலுவையில் உள்ளது என்று கேட்டால், பத்திரப்பதிவு தாமதமாக வாய்ப்பில்லை.

சில சமயம், தாமதம் குறித்து கேள்வி கேட்டால்,  மேல் இடத்தில் இருந்து பணம் கேட்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதனால் தான் அதை கண்காணிக்க மானிட்டர்குழு அமைக்க வேண்டும் என்று கூறுகிறேன். எனவே தாலுகா அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களை இதுபோன்ற மானிட்டர் கமிட்டி கண்காணித்தால் குறைக்கலாம். ஆன்லைனில் இருந்தால் மட்டும் போது வெளிப்படைத் தன்மை வேண்டும் அப்போது பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பொதுமக்களுக்கு தெளிவான வழிமுறைகளை சொல்ல வேண்டும்.  ஆன்லைன் மூலம் பதிவு ெசய்யும் போது பல வகையில் லஞ்ச ஊழல் தவிர்க்கலாம்.

Tags : Registration delay , monitored, Ram Prabhu, President, All India Container Association ,South Center
× RELATED அகில இந்திய டேபிள் டென்னிஸ் சென்னையில் தொடங்கியது