எல்லாவற்றுக்கும் ஒரு ரேட் உண்டு: ஆ.ஹென்றி, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர்

பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைப்பு என்று கபட நாடகமாடி விட்டு, பதிவுகட்டணத்தை உயர்த்த விட்டனர். 7 சதவீதம் பதிவுக் கட்டணம் 4 சதவீதம் முத்திரை தீர்வை கட்டணம் என்று 11 சதவீதம் ஆக்கியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு எந்த பயன்களும் இல்லை. ஏற்கனவே வழிகாட்டி மதிப்பு குறைப்பு இருந்தாலும், பதிவுக்கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக மாற்றிவிட்டனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பதிவுக்கட்டணம் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் செட்டில்மெண்ட் டாக்குமெண்ட் ₹25 ஆயிரமாக கட்டணம் உயர்த்தியுள்ளனர். அதிக பட்சம் ₹10 ஆயிரம் இருந்தது அதனுடன் ₹1000 கட்டணம் இருந்தது. அதை ₹25 ஆயிரமாகவும் மாற்றியுள்ளனர். எம்.ஓ.டி கட்டணம் ₹10 ஆயிரம் இருந்ததை ₹25 ஆயிரமும், முத்திரைத்தாள் ₹30 ஆயிரம் இருந்தை தற்போது ₹5100 கூடுதலாக உயர்த்தியுள்ளனர். பாகப்பிரிவினைக்கும் ₹10 ஆயிரம் இருந்ததை ₹25ஆயிரம் மாற்றி ₹1000 கட்டணம் என்பதை ₹5100 ஆக உயர்த்தியுள்ளனர்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க பதிவுத்துறை அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிடி கொடுக்கிறார்கள். அதில் தாங்கள் பதிவு செய்யும் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அப்படி கொடுத்தால் கூட மகிழ்ச்சி தான், பதிவு செய்த பத்திரத்தை காப்பி பண்ணி கொடுத்தால் கூட ஒரிஜினல் தொலைந்து போனால் கூட சிடியில் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அதில் அப்படி ஒன்றும் இல்லை பதிவுத்துறை அலுவலகத்திற்கு நீங்கள் போய் விட்டு வந்த வீடியோ பதிவு தான் உள்ளது. இது தேவையற்றது. அதுவும் 2 ஆண்டுகாலம் வழங்காமல் இருந்தார்கள். இதில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. அரசின் கவனத்துக்கு முறையாக செல்வதில்லை.

பத்திரப்பதிவு துறையில் உள்ள அதிகாரிகள் என்ன செய்தாலும், அது பற்றி பெரிதாக தெரிவதில்லை. எப்படியாவது தட்டிக்கழித்து விடுகின்றனர். அவர்களை காப்பாற்ற பலரும் முன்வருகின்றனர். இதனால் தான்  அதிக ஊழல் நடக்கிறது. சிடி வழங்கும் விவகாரத்தில் ₹30 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. சிடியும் வழங்கவில்லை ஆனால் அந்ததுறைக்கு மாதம் பணம் மட்டும் செலுத்துகின்றனர். இப்போது ஐஜியை சந்தித்து முறையிட்டவுடன் மறுபடியும் 2 மாதமாக கொடுக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பத்திரப்பதிவுக்கு முன்பதிவு செய்தாலும் குறித்த நேரத்தில் பதிவு செய்வதில்லை; கேட்டால் இணையதளம்  சர்வர் இயங்கவில்லை, நெட் இல்லை, மின்சாரம் இல்லை என்று தான் கூறுகின்றனர். அதைப்போல் பதிவுத்துறையில் பதிவு செய்தவுடன் 1 மணிநேரத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர். ஆனால் காலை 10 மணிக்கு போனால் மாலை 4 மணிக்கு தான் போட்டோ எடுக்க முடிகிறது. மேலும் ஆன்லைனில் அரசு எதைக்கொண்டு வந்தாலும் அதிகாரிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் ெகாள்கின்றனர். ஒரிஜினில் டாக்குமெண்ட் இல்லையா? அதுக்கு ஒரு ரேட் சொல்லி பணத்தை வாங்கிக் கொள்கின்றனர். இப்படி ஏதாவது பேப்பர் இல்லையென்றால்  இடைத்தரகரை வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இன்னும் இடைத்தரகர்  முறை ஒழியவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு ரேட் உண்டு. பல இடங்களிலும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் தனியார் ஆட்களை வைத்து வேலைவாங்குகின்றனர். பதிவுத்துறை மேம்படுத்துவதாக கூறி திட்டம் கொண்டு வந்து பலகோடியை வீணாக்குகிறது. பெயர் அளவுக்கு தான் உள்ளது. எந்தவிதமான முன்னேற்றம் இல்லை முதலில் ஸ்டார் திட்டம், ஸ்டார் 1.0 என்று கொண்டுவந்தனர். அதன்பிறகு 2.0 என்றெல்லாம் கொண்டு வந்தார்கள். ஆனால் எந்தவிதமான முன்னேற்றம் இல்லை. ஆனால் அவர்கள் தான் முன்னேறியுள்ளனர்.ஆன்லைனில் பத்திரப்பதிவுக்கு முன்பதிவு செய்தாலும் குறித்த நேரத்தில் பதிவு செய்வதில்லை; கேட்டால் இணையதளம்  சர்வர் இயங்கவில்லை, நெட் இல்லை, மின்சாரம் இல்லை என்று தான் கூறுகின்றனர்.

Related Stories: