கமல்ஹாசனுக்கு கருப்பு கொடி: திருப்பத்தூரில் 20 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கமல்ஹாசனுக்கு கருப்புக்கொடி காட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.காமராஜர் பிறந்த நாளையொட்டி திருப்பத்தூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று சீருடைகளை வழங்கினார். அப்போது, அவர் பேசும்போது, எனக்கு காமராஜரையும் பிடிக்கும், பெரியாரையும் பிடிக்கும். என் தலைவன் யார் என்று கேட்டால் காந்தியடிகள் என்றார்.

முன்னதாக, கமல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயபாரத மக்கள் கட்சி யினர் 20க்கும் மேற்பட்டோர், திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கமல்ஹாசனின் இந்து விரோத பேச்சை கண்டித்து முழக்கமிட்டனர்.  இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.


× RELATED பொள்ளாச்சி அருகே சமத்துவபுரத்தில்...