கேரள கடலில் மாயமான குமரி மீனவர் உடல் கரை ஒதுங்கியது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்த ஜாண்போஸ்கோ (46), ராஜூ (50) உள்ளிட்ட 5 பேர் கடந்த 13ம் தேதி, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றனர். 18ம்தேதி மாலை  சூறைக்காற்றால் படகு கவிழ்ந்தது. இவர்கள் 5 பேரும் கடலுக்குள் மூழ்கினர். இவர்களில் ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகியோர்  நீந்தி கரை சேர்ந்தனர். மற்ற 3 பேரை கேரள மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். இவர்களில் சகாயம் (32) உடல் நேற்று காலை கேரளாவின் முருகம்பாடத்தில் கரை ஒதுங்கியது.

Advertising
Advertising

Related Stories: