×

வங்கதேச உள்துறை அமைச்சர் 7ம் தேதி இந்தியா வருகை

புதுடெல்லி: வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் வருகிற 7ம் தேதி இந்தியா வருகிறார்.  அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். சட்டவிரோத குடியேற்றம், தீவிரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து அப்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு தலைவரை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Bangladesh, Home Minister, visit India, 7th
× RELATED மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று...