இமாச்சலில் நிலச்சரிவு குழந்தை பலி

சிம்லா:  இமாச்சலின் காங்ரா மாவட்டத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் பாக்சுநாத் கோயிலை பார்வையிட்டுள்ளனர். பின்னர் தரம்சாலாவில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ள பாக்சு நாத் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக  நடந்து சென்றுள்ளனர்.  அப்போது அவர்கள் செல்லும் வழியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதில், 8 மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது. மேலும், 5  பேர் காயமடைந்தனர். அவர்கள் காங்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: