மாங்காடு அருகே பூட்டிய வீட்டில் முதியவர் கொலை : போலீசார் விசாரணை

பல்லாவரம்: மாங்காடு அடுத்த மதனந்தபுரம், குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (78). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக  இவரது வீடு பூட்டியே கிடந்தது. இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாஸ்கரன் வீட்டு கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, அவர் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்பதால், உடல் அழுகிய நிலையில் இருந்தது. போலீசார், பாஸ்கரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை கொலை செய்த கொலையாளிகள் யார், அவரை எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Mangadu, locked house, Police ,investigating
× RELATED கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ. கொலை கர்நாடகா,...