திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 30 லட்சம், 14 சவரன் நகை மோசடி வாலிபர் மீது பெண் டாக்டர் புகார்: போலீசார் விசாரணை

ஆலந்தூர்: ஆலந்தூரில் பெண் டாக்டரிடம், திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ₹30 லட்சம், 14 சவரன் நகை ஆகியவற்றை ஏமாற்றிய வாலிபரிடம் மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் குமாரி (28) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில், குமாரிக்கும், பட்டாபிராமை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான சந்தோஷ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, சந்தோஷ் தனக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனதாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளர். இதனை குமாரியும் நம்பியுள்ளார்.

Advertising
Advertising

இதற்கிடையில், பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் சந்தோஷ் மீது குமாரி புகார் கொடுத்துள்ளார். அதில், சந்தோஷ் தன்னை திருமணம் செய்வதாக கூறினார். நானும் அதை நம்பினேன். இந்நிலையில், என்னிடம் இருந்து ₹30 லட்சமும், 14 சவரன் தங்க நகைகளையும் பெற்றுக்கொண்டு, தற்போது திருமணம் செய்யாமல் சந்தோஷ் ஏமாற்றி வருகிறார். கொடுத்த பணத்தையும், நகைகளை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் கூறி இருந்தார். இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: