போதைப்பொருட்கள் 1,330 கிலோ பறிமுதல்

சென்னை: சூளை ரவுண்டானா பகுதியில் போலீசார்நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட ஜர்தா புகையிலையை வைத்திருந்தது தெரியவந்தது. பிடிப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் மண்ணடி அய்யப்பசெட்டி தெருவை சேர்ந்த சதீஷ் (33) என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில், யானைகவுனி இருளப்பன் தெருவில் உள்ள குடோனில் இருந்த 1,330 கிலோ ஜர்தா பறிமுதல் செய்யப்பட்டது. குடோன் உரிமையாளர்களான சந்தீப்குமார் பாண்டே, ஷாம்தார் சுக்லா ஆகியோரை கைது செய்தனர். அதே போல் தலைமை செயலக காலனியில் கூல்டிரிங்ஸ் எஜென்சியில் பதுக்கி வைத்திருந்த குட்கா, ஹான்சை பறிமுதல் செய்தனர். கூல்டிரிங்ஸ் ஏஜென்சி உரிமையாளர் சண்முகத்தை கைது செய்தனர்.


Tags : Drugs, 1,330 kg ,seized
× RELATED திருவொற்றியூர் அருகே 2.5 கிலோ ஹெராயின் பறிமுதல்: 6 பேர் கைது