சுற்றுச்சூழல் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மைப்படுத்த 5,870 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: மாசடைந்த 34 ஆறுகளை தூய்மைப்படுத்த 5,870.55 ேகாடியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 77 நகரங்கள் வழியாக செல்லும் 34 ஆறுகள் சூற்றுச்சூழல்களால் மாசடைந்து காணப்படுகின்றன. மிக மோசமாக காணப்படும் இந்த ஆறுகளை தூய்மைப்படுத்த 5,870.55 கோடி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தொகையில் ₹,5 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு முதல் தவணையாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ளது. தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்த தொகையை மாநிலங்கள் இந்த ஆண்டு பெற்றுள்ளன.

கடந்தாண்டு 9 மாநிலங்களுக்கு 143 கோடி வழங்கப்பட்டது என மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியா மாநிலங்களவையில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நதிகளின் நிலையை கண்காணித்து வருகின்றன.  இந்த வகையில் நாடு முழுவதும் ஓடும் நதிகளில் 351 பகுதிகள் மாசு அடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Stories: