சாலைகளை தனியாருக்கு தாரைவார்த்தால் மாநிலம் தழுவிய போராட்டம்: சாலை பணியாளர் சங்கம் எச்சரிக்கை

கொடைக்கானல்: அரசு சாலைகளை தனியார் பராமரிக்க அனுமதித்தால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாைல பணியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் பயிற்சி முகாம் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் மாநிலம் முழுவதும் இருந்து 10 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் பேசுகையில், ‘‘தமிழக அரசின் மாநில, மாவட்ட சாலைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பழநி உள்ளிட்ட சில கோட்ட சாலைகளை பராமரிக்க தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. சுமார் ரூ.,800 கோடி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலம் 5 ஆண்டுகளாகும். இந்த சாலைகளை பராமரிப்பதற்கு ஆகும் செலவு ஆயிரம் கோடி ரூபாயில் முடிந்துவிடும். அத்துடன் பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு பெருகும். ஆனால் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது. அரசு சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு தாரை வார்த்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நாங்கள் செய்வோம்’’ என்றார்.  

Related Stories: