ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை அசோக் நகரில் விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 9ம் தேதி நடைபெற உள்ள விருது வழங்கும் விழா குறித்து ஆலோசனை செய்யபட்டது. பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஆணவ கொலைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இது அதிகரித்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

Advertising
Advertising

எனவே, வரும் 6ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். நீட் தொடர்பான மசோதா நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகின்றது. ஆனால், தமிழக முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் அப்படி ஒரு அறிவிப்பு இல்லை என்கின்றனர். இது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நடத்தும் நாடகம். தமிழக மக்களின் உணர்வுகளை காவு கொடுக்க மாநில அரசு தயாராகி விட்டது. நீட்டும் வேண்டாம், நெக்ஸ்டும் வேண்டாம் என சட்டம் இயற்றி அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: