சொல்லிட்டாங்க...

அரசு பள்ளிகளை அனைவரும் ஊக்கப்படுத்தினால் மட்டுமே பள்ளிகளை மேம்படுத்த முடியும். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.
- அமைச்சர் செங்கோட்டையன்.

பணம், ஒப்பந்த பணிகளை வழங்கி அமமுகவில் இருந்து ஆளுங்கட்சிக்கு ஆட்களை பிடிக்கும் முதல்வர் பேசிய ஆடியோ விரைவில் வெளியாகும்.
-  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் தமிழகத்தில்  இதுவரை இல்லாத அளவிற்கு ஆணவ  கொலைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இது  அதிகரித்துள்ளது.
- விசிக தலைவர் திருமாவளவன்

தமிழக  அமைச்சர்கள் இதுவரை தரிசனம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல,  48 நாட்கள் இருப்பதால் தரிசனத்திற்கு செல்ல நாட்கள் இருக்கிறது.
- அமைச்சர் ஜெயகுமார்.


Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...