மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மும்பை: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி பற்றி அறிவிப்பை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்கு விராத் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி.20 மற்றும் ஒருநாள் போட்டி ஆகியவற்றுக்கும் விராத் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து தொடர்களுக்கும் விராத் கோலியே கேப்டனாக நீடிப்பார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள்;


மேற்கிந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் விராத் கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஹானே (உதவி கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாராவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. விஹாரி, ரோகித் சர்மா, ரிஷப்பந்த்(விக்கெட் கீப்பர்), சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ரா, யாதவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான வீரர்கள்;


மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் ஒருதினப்போட்டி அணிக்கும் விராத் கோலி கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்துள்ளது. ரோகித் சர்மா(உதவி கேப்டன்) ஷிகர்தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ்ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப்பந்த், ஜடேஜாவுக்கு ஒருநாள் போட்டியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ், சஹால், கேதர்ஜாதவ், ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் ஹைனி ஆகியோரும் அணியில் இடம் பிடித்தனர்.

டி.20 போட்டிக்கான வீரர்கள்;


மேற்கிந்திய தீவுக்கு எதிரான டி.20 போட்டிக்கான இந்திய அணியின் விராத் கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், குருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர்.


தோனிக்கு வாய்ப்பு இல்லை

அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நட்சத்திர வீரர் டோனி இடம்பெறவில்லை. அவர் ராணுவ பணிக்கு இரண்டு மாதங்கள் தோனி செல்லவிருப்பதால் இந்த தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த தொடர் முழுவதும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார். இதேபோன்று ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு டி20 மட்டும் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் ஆடுவார்.Tags : West Indies team, Indian team, BCCI
× RELATED மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான...