அமெரிக்கா: குழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனத்தை லூமிஸ் ஸ்மார்ட் நேபி என்ற பெயரில் கூகிளின் துணை நிறுவனம் வடிவமைத்து அசத்தியுள்ளது. குழந்தைகளின் நேப்கின்களை எப்போது மாற்ற வேண்டும் என கவனிப்பதிலேயே பெரும்பாலான பெற்றோர்களின் தூக்கம் கலைகிறது. இதே போல் சிறுநீர் கோளாறு உள்ள முதியவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கும் நேப்கின்களை உரிய நேரத்தில் மாற்ற வேண்டும் என்ற படபடப்பு அவர்களை கவனித்துக்கொள்பவர்களுக்கு இருக்கும்.