தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் சாகர் கவாச் ஒத்திகையில் 10,000 அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் நடந்த சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீரர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினர் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக சாகர் கவாச் என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது 13 தமிழக கடலோர மாவட்டங்களில் 18ம் தேதி காலை 6 மணி முதல் 19ம் தேதி வரை மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சியில் அனைத்து துறைகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர். மேலும், கப்பல், படகு, ஹெலிக்காப்டர்கள், கரையோரம் ஓடும் வாகனங்கள் என 1000திற்கு அதிகமான ஊர்திகள் இப்பணியில் ஈடுபட்டன.

மேலும் கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் 19 படகுகள் மற்றும் 12 சிறப்பு ரோந்து வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கென நியமிக்கப்பட்டு தமிழக கடலோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காவலர்களில் 15 இடங்களில் இடைமறிக்கப்பட்டு 54 நபர்கள் பிடிக்கப்பட்டனர். மேலும் 5 கடத்தல்காரர்களால் சென்னை துறைமுக எல்லையில் கடத்தப்பட்டு, பின்பு கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கப்பலை மீட்கும் நடவடிக்கைகளில் முழுமையாக ஒத்திகை பார்க்கப்பட்டது.  

Related Stories: