சில்லி பாயின்ட்...

* இந்தியா ஏ அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 5 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. வெஸ்ட் இண்டீஸ் ஏ 50 ஓவரில் 298/9 (சேஸ் 84, தாமஸ் 70, கார்ட்டர் 50, அம்ப்ரிஸ் 46); இந்தியா ஏ50 ஓவரில் 293/9 (குருணல் 45, அக்சர் பட்டேல் 81*).

* கஜகஸ்தானில் நடைபெற்ற பிரெசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் ஆண்கள் 63 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் ஷிவா தாபா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பைனலில் அவருடன் மோதவிருந்த உள்ளூர் வீரர் ஜாகிர் சபியுலின் காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.
Advertising
Advertising

* நியூசிலாந்தில் நடைபெறும் ஏடிபி ஹால் ஆப் பேம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மார்கஸ் டேனியல் (நியூசி.) ஜோடி தகுதி பெற்றுள்ளது.

Related Stories: