ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து அல்ஜீரியா சாம்பியன்

கெய்ரோ: ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் அல்ஜீரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆப்ரிக்க நாட்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த தொடர் ஜூன் 21ம் தேதி எகிப்தில் தொடங்கியது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன. கெய்ரோவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல்ஜீரியா - செனகல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்ஜீரியாவின் பாக்தாத் பவுனேத்ஜா அசத்தலாக ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய செனகல் வீரர்கள் அல்ஜீரியாவின் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.  எனினும், அல்ஜீரியா தற்காப்பு ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியதால் செனகல் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அல்ஜீரியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Advertising
Advertising

Related Stories: