பணியில் இல்லாத அதிகாரிக்கு ஏர் இந்தியா 3கோடி சம்பளம்

மும்பை: பணியில் இல்லாத உயர் அதிகாரிக்கு மாதாமாதம் சம்பளத்தை அள்ளி விட்டது நிறுவனம். அந்த அதிகாரியும் இதுவரை 3 ேகாடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது தானே.  இப்படிப்பட்ட கேலிக்கூத்தை செய்தது பல கோடி நஷ்டத்தில் இருக்கும், தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ள ஏர் இந்தியா நிறுவனம் தான்.  கேப்டன் அதுல் சந்திரா; இவர் கடந்த 2017 வரை ஏர் இந்தியா நிறுவனத்தில் இணை பொது மேலாளராக இருந்தார். அதன் பின், சிவில் விமானப் போக்குவரத்து துறை இயக்குனர் அலுவலகத்தில் தலைமை விமான போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.   இவர் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் பணியில் சேர்ந்த பின்னும், அதாவது, 2017 ஜனவரிக்கு பின்னும் தொடர்ந்து அவர் வங்கி கணக்குக்கு ஏர் இந்தியா நிறுவனம்  பல லட்சம் சம்பளத்தை செலுத்தி வருகிறது. இது கண்டுபிடிக்கப்பட்டு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

  ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி, அந்த அதிகாரிக்கு, சம்பளத்தை பெற்றது குறித்து கேட்டபோது, ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பணம் தன் கணக்கில் வந்தது. ஆனால், இதுவரை 80 லட்சம் ரூபாய் வந்துள்ளது. அதை திருப்பி செலுத்தி விடுகிறேன்’ என்று கூறினார்.   உண்மையில், அதுல் சந்திராவுக்கு ஏர் இந்தியா இதுவரை 3 கோடி ரூபாய் வரை சம்பளத்தை செலுத்தி வந்துள்ளது.   விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. ஏர் இந்தியா பணியில் இருந்தபோதே கடந்த 2014 - 17 இடைப்பட்ட காலத்திலும் டெபுடேஷன் அடிப்படையில்  சிவில் விமானப்போக்குவரத்து துறையில் பணியாற்றி வந்தார் அதுல் சந்திரா. அப்போதும் இவருக்கு ேகாடிக்கணக்கில் தவறாமல்  வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு  வந்துள்ளது தெரியவந்துள்ளது.   அதுல் சந்திரா போல மேலும்  எத்தனை பேருக்கு இப்படி ஏர் இந்தியா நிறுவனம் சம்பளத்தை அள்ளி விட்டுள்ளது என்று விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Related Stories: