×

காஷ்மீர் பிரச்னையை எப்படி தீர்ப்பதென தெரியும்: ராஜ்நாத்

பண்டோரி:  பாகிஸ்தானுடன் 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காஷ்மீரின் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர்,  எல்லை சாலைகள் நிறுவனம் சார்பில் கதுவாவில் ஓடும் உஜ் நதியின் மீது ரூ.50 கோடியிலும், சம்பா மாவட்டத்தின் பஷந்தார் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் என் இதயத்தில் உள்ளது. காஷ்மீரை இந்தியாவின் சொர்க்க பூமியாக மாற்றுவது மட்டுமின்றி, உலகின் சுற்றுலா சொர்க்கமாகவும் மாற்ற பாஜ அரசு விரும்புகிறது. காஷ்மீர் பிரச்னை நிச்சயம் தீர்க்கப்படும். இதை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணப்படா விட்டால், அதை எப்படி தீர்ப்பது என்று எங்களுக்கு தெரியும்,’’ என்றார்.

Tags : Kashmir issue, Rajnath
× RELATED குடியரசுத் தலைவர் மாளிகையில்...