மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட இடநெருக்கடியை மீறி விவசாயத்தில் நெதர்லாந்து வெற்றிக்கொடி: வீட்டுக்கு வீடு பசுமைத்தோட்டம் ,.. படகுகளில் மாட்டுக் கொட்டகை

துபாய்: ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து மக்கள் நெருக்கடி நிறைந்த நாடு. 41,543  கிமீ பரப்பளவு கொண்ட இந்த சிறிய‌ நாட்டில்    17,308,133க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். மக்கள் தொகை  2050ல் 9.6 பில்லியனை தொடும் என எதிர்பார்க்கிறார்கள்.  எனினும், ம‌க்கள் தொகை அதிகளவை கொண்ட சிறிய‌ நாடான நெதர்லாந்து விவசாய உணவு உற்பத்தியில் உலகின்  முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. உலக அளவில் காய்கறி ஏற்றுமதியில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. வீட்டுக்கு வீடு விவசாய குடில்களை அமைத்துள்ளனர். குறிப்பாக பசுமை குடில்கள் அதிகளவில் உள்ள நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும்   உலகின் தக்காளி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடும் நெதர்லாந்துதான். இந்நாட்டில் மனிதர்கள் வசிக்கும் வீடுகளைவிடப் பசுமை வீடுகளின் எண்ணிக்கை அதிகம்.

2017ல் 92 பில்லியன் டாலர் விவசாயம் பொருள்களை ஏற்றுமதி செய்து அமெரிக்காவுக்கு சவால் விட்டது. இன்றுவரை  விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும் தக்காளி, உருளை, மிளகாய், மிளகு பல்வேறு விவசாய உணவு பொருள்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது.  நெதர்லாந்து மிளகாய் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றது சென்ற ஆண்டு நவம்பர் தமிழகத்தின் திண்டுக்கல் பகுதி நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டது. குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் தரும் என தெரிவிக்கப்பட்டது. சிறிய நாடான நெதர்லாந்து விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்வதில் பெரிய நாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது ஆச்சரியப்படுத்தும் நிகழ்வாகும். இதற்கு முக்கிய காரணியாக திகழ்வது நீர் மேலாண்மை மற்றும் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததுதான். இங்கு பெரும்பாலான‌ வீடுகள் தோறும் உள்ளரங்கு விவசாயம் நடைபெறுகிறது.

பல ஏக்கர் அளவில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் எந்த ஒரு தட்பவெட்ப சூழலிலும் தங்கு தடையின்றி விவசாயம் உற்பத்தி நடைபெறுகிறது. இடபற்றாக்குறை அதிகளவில் உள்ளதால்  வீட்டைச் சுற்றியுள்ள சுவரிலும், மாடியில் உள்ள சுற்றுச் சுவர்களிலும் அமைக்கப்படும் வெர்டிகல் கார்டன் (சுவர்த்தோட்டம்) என்ற முறை நடைமுறையில் உள்ளது.  வெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் பாசனம் செய்வது எளிதாகும். இதன் மூலம் குறைந்த அளவில் நீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது. மழை நீர் சேமித்து வைக்கப்பட்டு முறையாக பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில்  உலகின் முதல் முறையாக நடமாடும் பால் பண்ணையை செயல்படுத்தினர். இதில் படகுகளில் மேல்புற பகுதியில் மாடுகள் நிறுத்தப்பட்டு தேவையான மாட்டுதீவனங்களும் அதில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

மிக முக்கியமாக இடப்பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை என பல்வேறு  காரணங்களால் விவசாயம் செய்ய வழியில்லை என்ற கருத்தை உடைத்து மனமிருந்தால் மார்க்கம் உண்டு என நடமாடும் பால் பண்ணை, வெர்டிக்கல் கார்டன், புதிய தொழில் நுட்பம் என  விவசாயப் பொருள்கள் உற்பத்தியில் சாதனை படைக்கும் நெதர்லாந்து மற்ற நாடுகளுக்கு முன்னுதராணமாக திகழ்கிறது என்பதில் மிகையில்லை.

Related Stories: